அறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் தயாராகும் ‘டகால்டி’ என்ற படத்தில் சந்தானத்துடன் யோகிபாபு இணைந்து நடிக்கிறார்.

கைச்சுவை நடிகராக வலம் வந்து, கதையின் நாயகனாக தன்னை உயர்த்திக் கொண்டிருக்கும் நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்குதுட்டு 2’ படம் வணிகரீதியாக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் கதையின் நாயகனாக ‘ஏ1’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இதையடுத்து இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான விஜய் ஆனந்த் இயக்கத்தில்,‘ டகால்டி’  என பெயரிடப்பட்ட படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் .இந்த படத்தில் அவருடன் முன்னணி நாகைச்சுவை  நடிகரான யோகிபாபு இணைந்து நடிக்கிறார்.

சந்தானம் கதையின் நாயகனாக உயர்ந்த பிறகு, அவர் முன்னணி நாகைச்சுவை நடிகர்களை தன்னுடன் நாகைச்சுவை  டிராக் செய்வதற்கு பயன்படுத்தி வருகிறார். இதற்கு முன்னர் அவர் நடித்த ‘சக்கபோடு போடு ராஜா’ படத்தில் விவேக்கை நாகைச்சுவை நடிகராக வைத்துக்கொண்டார்.

 அதேபோல் தற்பொழுது மற்றொரு முன்னணி நாகைச்சுவை நடிகரான யோகிபாபுவை ‘டகால்டி’ படத்திற்காக நாகைச்சுவை நடிகராக உடன் வைத்திருக்கிறார். இந்த சேர்க்கை வெற்றிப் பெறும் என்கிறார்கள் திரையுலகினர்.

‘சக்க போடு போடு ராஜா ’படத்தின் வெற்றியைப் போலவே, டகால்டி படமும் வெற்றி பெறும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.