கடும் வெயிலின் தாக்கத்தினால் ஹைதராபாத்தில் நடந்த ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

கோடை வெயில் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா உள்ளிட்டமாநிலங்களிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாகுபலி திரைப்பட படப்பிடிப்பில் நடிகைகளான அனுஷ்காவும், தமன்னாவும் தங்களால் கடும் வெயிலில் மேக்கப்போட்டு நடிக்க கஷ்டமாக இருக்கிறது என்று தெரிவித்ததோடு துணை நடிகர்களும் வெயிலின் தாக்கதினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பாகுபலி இரண்டாம் பாகம் படத்தின் படப்பிடிப்பை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக படத்தின் இயக்குநர் ராஜமௌலி அறிவித்துள்ளார் .

இதேவேளை பல முன்னணி நடிகர்களின் திரைப்பட படபிடிப்பு அனைத்தும் கடும் வெயில் காரணமாக காஷ்மீர் உள்ளிட்ட குளிர் பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.