தடைசெய்யப்பட்டுள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரும், கடந்த 21 ம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியுமான சஹ்ரான் உட்பட 36 பேர் பயிற்சி பெற்ற பயிற்சி முகாமொன்றை நுவரெலியா பொலிஸார் இன்று ( 06.05.2019) சுற்றிவளைத்துள்ளனர்.
அம்பாறை சாய்ந்தமருது பிரதேத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்தே மேற்படி நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு மாடி கட்டிடமொன்றை பொலிஸாரும் விசேட அதிரடி படையினரும் சுற்றிவளைத்துள்ளனர்.
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் பகுதியில் உள்ள பாடசாலைக்கு மிக அருகிலுள்ள இரண்டு மாடி கட்டிடமே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
சஹ்ரான் உட்பட 36 பேர் வரையில் இங்கு பயிற்சி பெற்றுள்ளதாகவும் கடந்த 21 ம் திகதிக்கு முன்னராக ஏப்ரல் 17 ம் திகதி தாக்குதலுகான இறுதி பயிற்சியை இந்த கட்டிடத்திலே மேற்கொண்டுள்ளதுடன் குறுகிய கால குத்தகை அடிப்படையிலே குறித்த இரண்டு மாடி கட்டிடத்தை குத்கைக்கு பெற்றுள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சுற்றிவைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட பணியாளர் ஒருரையும் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடதக்கது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM