ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் நிறைவேற எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரேமி கார்பைனின் உதவியை இங்கிலாந்து பிரதமர் நாடியுள்ளார்.

இதுபற்றி இங்கிலாந்து பிரதமர் தெரசா மே குறிப்பிடுகையில்,

“இங்கிலாந்து வாக்காளர்கள் சொன்னதை (பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது) தொழிற்கட்சி காது கொடுத்து கேட்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரெக்ஸிட் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு தொழிற்கட்சி உதவ வேண்டும்” என கூறினார்.

‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் ஆளும் கன்சர்வேடிவ் மற்றும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி இடையே மீண்டும் நாளை பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.

இதற்கிடையே ‘பிரெக்ஸிட்’ இறுதி ஒப்பந்தம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கிலாந்தில் எழுந்துள்ளது. 

இது தொடர்பான கோரிக்கையில் எதிர்க்கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.