பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் இருக்கும் அனைத்து மதுபான வியாபார நிலையங்களையும் மூடிவிடுமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நேற்றையதினம் நீர்கொழும்பு பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் பின்னர் வன்முறையாக மாறியது. இதில் பல வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.

இதையடுத்து நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்தித் ஆண்டகை நீர்கொழும்பு பிரதேசத்திலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.