சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ஸ்டோம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இடையிலான சந்தித்திப்பு தற்போது வெளிவிவகார அமைச்சகத்தில் இடம்பெறுகின்றது.

வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில் நேற்று ஏழு பேர் அடங்கிய குழுவுடன் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ஸ்டோம் இலங்கைக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில்  இடம்பெற்றுவரும்  மிகவும் ஆரோக்கியமான மற்றும் சாதகமான மாற்றங்களை நாங்கள் காண்கின்றோம்.   விசேடமாக இலங்கையானது  சர்வதேச  சமூகத்துடன்  செயற்பாட்டு ரீதியாக  இணைந்து செயற்படுவதற்கு வெளிக்காட்டும் அர்ப்பணிப்பை பாராட்டுகின்றோம்  என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர்  மார்கொட் வோல்ஸ்ட்ரோம் தெரிவித்தார். 

இலங்கைக்கும் சுவீடனுக்கும் இடையிலான நீண்டகால  பொருளாதார மற்றும் வர்த்தக ரீதியான உறவை  மேலும் வலுப்படுத்துவது குறித்து  அமைச்சர் மங்கள சமரவீரவுடனான  கலந்துரையாடலின்போது விரிவாக ஆராயப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.