சமூக இணைத்தளங்கள் சிலவற்றின் மீது தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க களுவேவ சற்று முன்னர் தெரிவித்தார்.

நேற்று நீர்கொழும்பு பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரணமாக நேற்றிரவு சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் சற்று நேரத்திற்கு முன்னர் அதன் மீதான தடை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.