மட்டக்களப்பு கெம்பஸ் நிறுவனத்தின் நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த தகவல்களில் முரண்பாடுகள் காணப்படுகின்றன என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் உயர்கல்வி அமைச்சின் பாராளுமன்ற உபகுழுவின் தலைவருமான பேராசிரியர் ஆசுமாரசிங்க வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- அவசரகால நிலைமைகளில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து உடை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் தாங்களும் அந்த முறையை நீக்கும் வகையில் தனிநபர் பிரேரணையினை சமர்ப்பித்துள்ளீர்களே?

பதில்:- ஆம், தற்கொலைத் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டவுடன் தான் நான் அவ்வாறான முடிவொன்றை எடுக்க நேரிட்டது. நாட்டின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு மேற்படி தீர்மானத்தினை எடுத்திருந்தோம். அந்த வகையில் நான் முகத்தை மூடியவாறு குறித்த ஆடை அணிவதை தடைசெய்யக்கோரி தனிநபர் பிரேரணையை சபாநாயகரிடத்தில் சமர்ப்பித்துள்ளேன். 

குறித்த பிரேரணையை ஒழுங்குப்புத்தகத்தில் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் எடுத்துள்ளார். அதன் பின்னர் தான் இப்பிரேரiணை எப்போது விவாதத்திற்கு எடுப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும். அதனை சபாநாயகரும், பாராளுமன்ற செயலாளருமே தீர்மானிப்பர். தற்போதைய நிலைமைகளை கருத்திற்கொண்டு விரைவில் அதுகுறித்து தீர்மானம் எடுப்பார்கள் என்று கருதுகின்றேன்.

தற்போதைய நிலையில் இந்த புர்கா ஆடைக்கு அவசரநிலைமைகளின் அடிப்படையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனைவிடவும் இந்த ஆடை விவகாரம் தொடர்பில் அமைச்சரவையிலும் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

அமைச்சரவைப் பத்திரமொன்றை தயாரிப்பது பற்றியும் பேசப்பட்டிருக்கின்றது. ஆகவே அது குறித்த நிலைமைகள் எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது. அமைச்சரவையில் முஸ்லிம் சகோதரர்களின் பிரதிநிதிகளின் ஆதரவுடன் தீர்மானம் எடுக்கப்படுமாகவிருந்தால் எனது தனிநபர் பிரேரணை அவசியமாக இருக்காது. அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுமாயின் நான் எனது பிரேரணையை வாபஸ் வாங்குவேன்.

கேள்வி:- தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்துள்ள நீங்கள் அப்பிரேரணைக்கு ஆதரவை பெறுவதற்காக உங்களுடைய மற்றும் ஏனைய அரசியல் தரப்பினருடன் கலந்துரையாடல்களைச்  செய்திருக்கின்றீர்களா?

பதில்:- உண்மையிலேயே டுபாய் போன்ற நாடுகளில் புர்கா ஆடைகள் மணல்காற்றிலிருந்து பாதுகாப்பதற்காகவே அணியப்பட்டன. வரலாற்று ரீதியாக பார்க்கின்றபோது இலங்கை வாழ் முஸ்லிம்கள் முழுமையாக முகத்தினை மூடியவாறு ஆடைகளை அணிந்ததில்லை. அண்மைக்காலமாகத்தான் அத்தகைய கலாசாரமொன்று தோற்றம்பெற்றுள்ளது. மேலும் அவர்களுடைய சமயத்திலும் கட்டாயமாக அவ்வாறு ஆடை அணியவேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் குறித்த தனிநபர் பிரேரணையை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக எமது கட்சியில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தேன். அவர்கள் தமது பூரண ஆதரவை வழங்குவதாகவும் இந்த விடயத்தினை நடைமுறைச்சாத்யமாக்குதற்கான சந்தர்ப்பம் தற்போதே ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கேள்வி:- கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாகிவரும் பல்கலைக்கழம் ஒன்று குறித்து தாங்கள் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றீர்கள். அந்தக்கருத்துக்களை தற்போதைய சூழலில் வெளியிடுவதன் பின்னணி என்ன?

பதில்:- அவ்வாறு எந்தவிதமான பின்னணியும் இல்லை. அரசியல் காரணங்களும் இல்லை. உயர்கல்வி அமைச்சின் துறைசார் மேற்பார்வை பாராளுமன்ற உபகுழுவின் தலைவர் என்ற வகையில் தான் அந்த தனியார் பல்கலைதொடர்பில் மீளாய்வு செய்யுமாறு எமக்கு தகவல்கள் வழங்கப்பட்டன. அதற்கமையவே நாம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.

கேள்வி:- தற்போதைய மீளாய்வுகளில் எவ்வாறான தகவல்கள் கிடைத்துள்ளன?

பதில்:- தொழிற்பயிற்சி திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சுடன் ஹிரா  பௌண்டேசன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக மட்டக்களப்பு புனானையில் கிராமிய பயிற்சி மத்திய நிலையம் அமைக்கப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு ஹிரா பௌண்டேசன் மூலமாக கிராமிய பயிற்சி மத்தியநிலையமொன்றை அமைப்பதற்காக 35 ஏக்கர் காணியை பெற்றுள்ளார்கள். இதற்கு வருடம் 4இலட்சத்து 91200 ரூபா செலுத்த வேண்டும்.

அப்போது உயர்கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி சரத் அமுனுகமவிற்கு, ஹிரா பௌண்டேசனின் உதவியுடன் தொழிற்பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மூன்று பாடத்திட்டங்களை பயில்வதற்கான 250 மாணவர்களுடன் குறித்த நிறுவனம் இயங்கி வருகின்றது. இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட டீயவவiஉயடழய ஊயஅpரள ஊழடடநபந Pசiஎயவந டுiஅவைநன இனை உயர்கல்வி நிறுவனமாக பதிவுசெய்வதற்கான அனுமதி வழங்குமாறு கோரி நிறுவனத்தின் பணிப்பாளரும் பொருளாதார பிரதி அமைச்சருமான  ஹிஸ்புல்லாவினால் 2015 ஜுலை 3ஆம் திகதி கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் 2015ஆம் ஆண்டு ஜுலை மாதம் 14ஆம் திகதியே டீயவவiஉயடழய ஊயஅpரள ஊழடடநபந Pசiஎயவந டுiஅவைநன பதிவு செய்தமைக்கான இலக்கம் கிடைத்தது. ஆகவே, இதில் முரண்பாடு இருக்கின்றது. இதனைவிடவும் இதனாலேயே இந்த பல்கலைக்கழகம் சம்பந்தமான மீளாய்வினைச் செய்யுமாறு அமைச்சினால் அறிவுத்தப்படுகின்றது. அதற்கமைவாக முன்னெடுத்த மீளாய்வுகளின் பிரகாரம்,Batticaloa Campus College Private Limited நிறுவனத்தின் இநதப் பெயர் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 29 ஆம் திகதி\ டீயவவiஉயடழய ஊயஅpரள Pசiஎயவந டுiஅவைநன என மாற்றப்படுகிறது. அதாவது ஊழடடநபந என்ற சொல் நீக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தை நிர்மாணிக்க வெளிநாடுகளில் இருந்து 3600 மில்லியன் ரூபா ஆறு கட்டங்களில் கிடைத்துள்ளது.

முதற் சந்தர்ப்பத்தில் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி 564 மில்லியனும், இரண்டாவது சந்தர்ப்பத்தில் 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் திகதி 526 மில்லியனும், மூன்றாவது சந்தர்ப்பத்தில் 2016 ஆம் ஆண்டு 424 மில்லியனும் நான்காவது சந்தர்ப்பத்தில் 2017 ஆம் ஆண்டு 541 மில்லியனும், ஐந்தாவது சந்தர்ப்பத்தில் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 438 மில்லியனும் ஆறாவது சந்தர்ப்பத்தில் 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 450 மில்லியனுமாக வெளிநாடுகளிலிருந்து நேரடியாக மொத்தம் 2945 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது.

இதனைத் தவிர வைப்பிலிடப்பட்ட தொகையாக 400 மில்லியன் ரூபா உள்ளது. இந்த அனைத்தும் சேர்க்கப்பட்டால் 3600 மில்லியன் ரூபா வட்டியில்லாத கடனாக கிடைக்கப்பெற்றுள்ளது. அது தொடர்பில் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கப்படவில்லை. குறித்த பணம் கொள்ளுப்பிட்டி இலங்கை வங்கியூடாக நிதி ஆவணமொன்றாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. டீயவவiஉயடழய ஊயஅpரள Pசiஎயவந டுiஅவைநன எனும் நிறுவனத்தின் பெயருக்கே அப்துல்லா அலி என்பவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்துல்லா அலி என்பவரிடமிருந்தே வட்டியற்ற கடனாக இந்த தொகை பெறப்பட்டுள்ளது. இதற்கான எந்த ஒப்பந்தங்களும் காணப்படவில்லை.

இதனைவிடவும், ஹிரா பௌண்டேசன் பணிப்பாளராக கிழக்கு ஆளுநரான ஹிஸ்புல்லாவும் அவருடைய புதல்வருமே உள்ளனர். அத்துதோடு டீயவவiஉயடழய ஊயஅpரள ஊழடடநபந Pசiஎயவந டுiஅவைநன நிறுவனத்தின் ஆரம்ப பணிப்பாளர்களா ஹிஸ்புல்லாவும் அவருடைய புதல்வருமே உள்ளனர். இவர்களே பங்குதாரர்களாகவும் உள்ளனர். இங்கும் பிரச்சினைகள் உள்ளன. மேலும் ஹிரா பௌண்டேசனுக்கு உதவித்தொகையாக நிதி கிடைத்ததாக கூறுகின்றார்கள். மறுபக்கத்தில் இலகு கடன் மூலம் நிதி கிடைத்ததாகவும் கூறப்படுகின்றது. 

இவ்வாறு தகவல்களில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே அனுமதி வழங்காது உள்ளோம். ஆகவே  தற்போதைய நிலையில் இந்த நிறுவனத்திற்கு திறன்கள் அபிவிருத்தி அமைச்சும் அனுமதி வழங்கியதாக இல்லை. உயர்கல்வி அமைச்சும் வழங்கியதாக இல்லை.

கேள்வி:- இந்த நிறுவனம் தொடர்பில் அடுத்த கட்டம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளீர்கள்?

பதில்:- இந்த நிறுவனம் தொடாபில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. தோடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. ஆகவே, இந்த நிறுவனத்தினை அரசாங்கம் பொறுப்பேற்று நடத்த வேண்டும். அதன் மூலம் ஷரீயா சட்டம் கற்பிக்கப்படுகின்றதா இல்லையா போன்ற பல்வேறு சந்தேகங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை தடுத்து நிறுத்த முடியும்.