யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலையொன்றிலிருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கொக்குவில் வராகி அம்மன் ஆலயப் பகுதியிலும் வாள் ஒன்று வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலைகளின் மேல் பிரிவுகளை நாளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இன்று பொலிஸாரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் மேற்படி பாடசாலையின் இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் பாடசாலையின் மண்டபம் ஒன்றில் மேல் மாடியில் இருந்து வாள் ஒன்று மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொக்குவில் வராகி அம்மன் கோவிலடியில் வாள் ஒன்று வீசப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் அதனை மீட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM