விஷமாகும் வேர்க்கடலை

Published By: Robert

25 Apr, 2016 | 10:18 AM
image

கல்லீரல், இரசாயனப் பொருள்களாலோ அல்லது வைரஸ் கிருமிகளாலோ பாதிக் கப்படும் போது அங்குள்ள செல்கள் அழிகின்றன. அவை மீண்டும் புத்துயிர் பெற்றாலோ அல்லது அவ்விடத்தில் புதிய செல்கள் உற்பத்தியானாலோ ஏதேனும் ஒரு செல் நோய் செல்லாக மாறிவிடக்கூடிய வாய்ப்பு உண்டு. அத்துடன் தொடர்ந்து மது அருந்துவதாலும் ஈரல் கெட்டுப்போய் பின் அதன் செல்கள் மீண்டும் புத்துயிர் பெறும் போது அந்த செல் நோய் செல்லாக மாறு வதற்கு வாய்ப்புண்டு.

இத்தகைய நோயால் பாதிக்கப்பட்ட செல்களே பின்னாட்களில் புற்றுநோயைத் தோற்றுவிக்கும் காரணியாக மாறுகின்றன. ஒரு சிலருக்கு இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் ‘ஹீமோகுரோமோடோடிஸிஸ்’ என்ற வேதிப் பொருளின் தூண்டல் அதி கரிக்கப்பட்டு கல்லீரலில் புற்று நோய் உரு வாகிறது.

அதே போல் சிலர் வேர்க்கடலையை நல்ல கொழுப்புச் சத்து உள்ள பொருள் என்று எண்ணி சாப்பிடுவர். இதில் தவறில்லை. ஆனால் வேர்க்கடலையை சில மாதங்கள் வரை சரியாக பாதுகாக்காமல் வைத்திருந்தால் ஒரு வகை காளான் அதில் உருவாகிவிடும்.

இவை அஃப்ளாடாக்ஸின் (Aflatoxin) என்ற விஷத்தன்மையுள்ள வேதிப் பொருளாக மாறிவிடுகிறது. இதையறியாத நாம் அந்த வேர்க்கடலையை சாப்பிடுகிறோம். இதனால் கல்லீரல் செல்கள் இயல்பை விட பலமடங்கு தூண்டப்பட்டு அங்கிருக்கும் செல்களை விரைந்து பெருகச் செய்து புற்றுநோயை உண்டாக்குகின்றன.

அதே போல் கர்ப்பத்தடை மாத்தி ரைகளை இயல்பை விட அதிக நாட் களுக்கு பயன்படுத்தும் பெண்களுக்கும் கல்லீரலில் புற்று நோய் உண்டாகும். அதை தவிர்த்து ஸ்டீராய்ட் மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கும், மது மற்றும் புகை பழக்கத்தை கைவிட மறுப்பவர்களுக்கும் கல்லீரலில் புற்று நோய் உண்டாகும்.

மிக அரிதாக சிலருக்கு வில்சன் நோய் மற்றும் ஹீமோ குரோமோடோஸிஸ் என்ற இரண்டு வகை நோய்களிலும் வெளியேற வேண்டிய தாமிரச் சத்து மற்றும் இரும்புச் சத்து வெளியேறாமல் ஈரலைத் தாக்குவதால் அங்கு வீக்கம் உண்டாகி, அவை பின்னர் புற்றுநோயாக மாறுகின்றது.

இத்தகைய பாதிப்பு இருப்பவர்கள், தங்களின் மேல் வயிற்றின் வலது பாகத் தைக் கையால் தடவிப் பார்த்தால் உணர இயலும். பசியின்மையும், அடிவயிற்றில் வலி விட்டுவிட்டோ அல்லது தொடர்ந்தோ வரலாம். ஒரு சிலருக்கு மஞ்சள் காமா லையாகவும் இதன் அறிகுறியை வெளிப் படுத்தலாம்.

இத்தகைய சமயங்களில் அவர்களின் மலம் கறுப்பு வண்ணத்தில் வெளியேறும். ஒரு சிலருக்கு இரத்த வாந்தியும் ஏற்படக் கூடும். அடிக்கடி காய்ச்சலும் ஏற்படும். இத்தகைய அறிகுறிகள் வந்தால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவர்களை சந்தித்து முறையாக பரிசோதனைகளை செய்து, நோயின் தீவிரத்தன்மையை குறித்து உறுதிச் செய்து கொண்டு அதற்கேற்ற சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

டாக்டர். இரா. குணசேகரன்

தொகுப்பு: அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயஸ்தீனியா கிராவிஸ் எனும் ஒட்டோ இம்யூன்...

2024-02-27 15:19:13
news-image

இணைப்பு திசுக்களில் ஏற்படும் பாதிப்புக்குரிய நவீன...

2024-02-26 17:08:02
news-image

சிலிகோசிஸ் எனும் நாட்பட்ட நுரையீரல் பாதிப்பிற்குரிய...

2024-02-22 17:04:44
news-image

டெர்மடோமயோசிடிஸ் எனும் தசை வீக்க பாதிப்பிற்குரிய...

2024-02-20 16:54:31
news-image

தீவிர ஒவ்வாமை பாதிப்புக்குரிய நவீன சிகிச்சை

2024-02-19 18:58:31
news-image

மென்திசு சர்கோமா புற்றுநோய் பாதிப்புக்குரிய நவீன...

2024-02-17 17:36:29
news-image

பிரைமரி பிலியரி கோலாங்கிடிஸ் எனும் கல்லீரல்...

2024-02-17 16:39:47
news-image

செரிபிரல் வெனஸ் த்ராம்போஸிஸ் எனும் பெரு...

2024-02-16 20:22:59
news-image

தட்டணுக்களின் எண்ணிக்கை குறைபாட்டிற்குரிய நவீன சிகிச்சை

2024-02-14 16:15:29
news-image

லிம்பெடிமா எனும் நிணநீர் மண்டல பாதிப்பிற்குரிய...

2024-02-13 16:55:56
news-image

புற்று நோய்க்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை...

2024-02-12 16:40:05
news-image

நியூரோஎண்டோகிரைன் கட்டிகளுக்கு நிவாரணமளிக்கும் சிகிச்சை

2024-02-09 16:49:44