(நா.தினுஷா)

பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு சட்ட , ஒழுங்கு அமைச்சை வழங்க கோரி நூறு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பமிட்ட கடிதமொன்றை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க ஆளும் தரப்பு தீர்மானித்துள்ளது.

அலரி மாளிகையில் நாளை காலை இடம்பெறவுள்ள ஆளும் கட்சி கூட்டத்தில் இவ்விடயம் குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதுடன் கோரிக்கைக்கு தேவையான கையொப்பங்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.

தற்போதைய நிலைமைகளில் சட்ட ஒழுங்கு அமைச்சு வலுவிழந்து வருவதுடன் பாதுகாப்புத்துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு இந்த அமைச்சு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைபாட்டில் ஐக்கிய தேசிய கட்சி காணப்பட்டது. 

குறித்த கடிதம் தொடர்பில் மேலும் தெரியவரகையில்,

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் சூழ்நிலையில் கடந்த காலங்களில் சட்ட ஒழுங்கு அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்குமாறு ஜனாதிபதியை ஐக்கிய தேசிய கட்சி வலியுருத்தியிருருந்தது. ஆனால் இதுவரையில் எங்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. 

அதன் காரணமாக சரத் பொன்சேகாவுக்கு சட்ட ஒழுங்கு அமைச்சை வழங்க கோரி ஆளும் தரப்பினரால் கையொப்பமிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கையளிக்க தீர்மானிக்கப்பட்டது. 

அதற்கமைவாக குறித்த கடித்துக்கான ஆளும் தரப்பின் கையொப்பத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.