மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாழ்வுபாடு மற்றும் கீரி ஆகிய கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சுமார் 25 ற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதோடு, கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகள் மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.