பல்கலை மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் அனுமதியை பெற நடவடிக்கை - விக்கி பாசாங்கு செய்வதாகவும் கூட்டமைப்பு சாடல்

Published By: Priyatharshan

05 May, 2019 | 07:05 AM
image

யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு சட்டமாஅதிபரின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளதோடு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விடயங்களை சரியாக அறியாது அல்லது விளங்காமை போன்று பாசாங்கு செய்வதாகவும் சாடியுள்ளது.

இதுதொடாபில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்,ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறுதெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல்கலைக் கழக நிர்வாகத்தின் கோரிக்கையின் பெயரில் பல்கலைக் கழகத்தில் நடாத்தப்பட்ட சோதனையின்போது கைது செய்யப்பட்ட இரண்டு மாணவத் தலைவர்களும் குற்றம் சாட்டப்படாமல் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகிறது. பல காலமாக அவர்களின் அறையில் இருந்த படங்களையும், ஆவணங்களையும் காரணம் காட்டி மாணவர்கள் கைது செய்யப்பட்டதனை கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கின்றது.

மாணவர்கள் கைது செய்யப்பட்டவுடன் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. 

சேனாதிராஜாவும் , நானும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன் ஆகியோர் கோப்பாய் பொலிஸ் நிலையம் சென்று மாணவர்களுடன் உரையாடி அது தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுடன் உரையாடி விடுவிக்க கோரியபோது பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்தாமல் விடுவிக்க முடியாது. எனத் தெரிவித்தனர். அதன்படி நீதவான் முன்னிலையில் முற்படுத்திய நிலையில் மே16 வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த இரு மாணவர்களிற்கும் எதிராக பொலிஸார் நான்கு சட்டங்களின் அடிப்படையில் பொலிஸார் தகவல் கொடுத்துள்ளனர்.

இதிலொன்று பயங்கரவாத தடைச் சட்டம். இரண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள். மூன்றாவது சிவில் அரசியல் உரிமைகளிற்கான சர்வதேச பட்டய சட்டம். நான்கவதே 2019 ஏப்பிரல் 22 ஆம் திகதி அமுல் படுத்தப்பட்ட அவசரகாலச் சட்ட விதிகள். ஆகிய சட்டங்களை மேற்கோள் காட்டி நீதிவான் முன்னிலையில் முற்படுத்திய காரணத்தினால் இவர்களை பிணையில் விடுவிக்கும் அதிகாரம் நீதிவான் நீதிமன்றிற்கு கிடையாத காரணத்தினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.

குறித்த இரு மாணவர்கள் சார்பிலும் சட்டத்தரணி கே.சயந்தனும் பல்கலைக் கழகம் சார்பில் குருபரன், சுகாஸ் ஆகிய சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர். இதேநேரம் குறித்த மாணவர்களை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபரின் இணக்கத்தை பெறவேண்டும் என்பதன் அடிப்படையில் அந்த இணக்கத்தை சட்டமா அதிபரிடம் இருந்து பெறுவதற்கான ஏற்பாடுகளிலும் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.

இதேநேரம் குறித்த விடயம் தொடரபில் வடக்கு மாகாணத்தின் முன்னால் முதலமைச்சரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசருமாகிய சி.வி.விக்னேஸ்வரனும் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதிலே வடக்கில் இராணுவம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கூட்டமைப்பு கோரியதாக தவறான கூற்றை வெளிப்படுத்தியுள்ளார். 

உண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எவரும் இராணுவம் தொடர்ந்தும் வடக்கில் நிலைகொள்ள வேண்டும் எனக் கோரவில்லை. அப்படியான தவறான கூற்று வந்திருந்தால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பல்ல. மாறாக இவ்வாறான கோரிக்கையை விடுத்த ஒரேயொரு நபர் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரான அனந்தி சசிதரன் மட்டுமே ஆகும்.

இந்த நிலையில் விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் மீது மற்றுமோர் குற்றச் சாட்டையும் முன்வைத்துள்ளார். அதாவது அவசரகாலச் சட்டத்தை பாராளுமன்றில் எதிர்க்காமல் விட்டுவிட்டு கைது செய்தவர்களை விடுமாறு பொலிஸ் நிலையம் சென்றதாகவே அந்தக்குற்றச்சாட்டு உள்ளது.

மேலே கூறப்பட்டதன் பிரகாரம் இந்த இரு மாணவர்களும் அவசர கால விதியின் கீழ் மட்டும் கைது செய்யப்படவில்லை. அதற்கு அப்பாலும் மூன்று சட்டங்களை மேற்கோள் காட்டியுள்ளனர். அதில் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் சட்ட விதிகளும் அடங்கும். இந்தச் சட்டங்களின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பலர் விக்கினேஸ்வரன் மேல்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதியரசராகவும் இருந்த சமயங்களில் பலர் குற்றவாளிகளாக கானப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டனர். ஆனால் அவசரகாலச் சட்டத்தை கூட்டமைப்பு எமிர்க்கவில்லை எனக் காரணம்காட்டி தன்னை புனிதவானாக காட்ட முனைவது பொருத்தமற்றது.

அவசரகால பிரகடனத்தை கூட்டமைப்பு மட்டுமல்ல எவருமே எதிர்க்கவில்லை. ஆனால் அவசர காலம் வேறு அதன்கீழ் செய்யப்படும் அவசரகால சட்ட விதிகள் வேறு. அவசரகால பிரகடனத்தின் பின்பு கொண்டு வந்த அவசரகால விதியில் சில மோசமான விதிகள் இருப்பதனை நாம் சுட்டிக்காட்டி அவற்றை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளோம். 

அதனை உரிய இடத்தில் சவாலுக்கு உட்படுத்துவோம். இங்கே அவசரகால விதிகள் இல்லாதிருப்பினும் இந்த மாணவர்கள் ஏனைய மூன்று விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருக்க கூடும். எனவே விடயங்களை சரியாக அறியாது அல்லது விளங்காமை போன்று பாசாங்கு செய்து விக்கினேஸ்வரன் அறிக்கை வெளியிட்டமை துரதிஸ்டவசமான செயல்பாடாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37