டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக்குழுவின் தலைவருமான மகந்துரே மதூஷ் டுபாயில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நாடுகடத்தப்பட்ட மாகந்துரே மதூஷ் இன்றைய தினம் அதிகாலை 5 மணியளவில் யு.எல். - 226 என்ற விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

விமான நிலையத்தை வந்தடைந்த பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவரான மாகந்துரே மதூஷை குற்றத்தடுப்புப் பிரிவினர் பொறுப்பேற்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவரை கைதுசெய்துள்ள குற்றத்தடுப்புப் பிரிவினர், குற்றத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்திற்கு மேலதிக விசாரணைக்காக அழைத்துச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.