(நா.தனுஜா)

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தொடர்குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளின் அடுத்த இலக்காக பௌத்த விகாரைகள் இருக்கக்கூடும் என்ற கோணத்தில் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதேபோன்று பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தேவாலயங்களில் நாளைய தினம் ஞாயிறு ஆராதனைகளை முன்னெடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கின்றார். 

இந் நிலையில் இந்து ஆலயங்கள் தாக்குதல் தாரிகளால் குறி வைக்கப்படாது என்பதற்கான எவ்வித உத்தரவாதமும் இதுவரை வழங்கப்படாத நிலையில், இந்து ஆலயங்களின் பாதுகாப்பிலும் அதிக அக்கறை செலுத்துமாறு இலங்கை இந்து சம்மேளனம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.