களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் படுகாயமடைந்ததுடன் காரொன்றும் முற்றாக சேதமடைந்துள்ளது.

குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டினை இழந்து மரத்துடன் மோதியதனாலையே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

காரில் பயணித்த மூன்றுபெண்கள், மூன்று ஆண்கள் அடங்களாக ஆறுபேரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதில் ஐவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பேர் மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.