கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் உழவு இயந்திரம் புகையிரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது.

 குறித் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றள்ளது. குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

தனியார் பழச்சாறு உற்பத்தி தொழிற்சாலை கழிவுகளை ஏற்றி சென்ற தனியார் உழவு இயந்திரம், குறித்த கழிவுகளை கொட்டிவிட்டு திரும்புகையில், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உருத்திராதேவி புகையிரதத்துடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது உழவு இயந்திரம் பலத்த சேதங்களிற்கு உள்ளாகியுள்ளது. சாரதி தெய்வாதீனமாக எவ்வித காயங்களும் இல்லாது தப்பித்துக்கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாறான பல விபத்துக்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளது. இதேவேளை தொடர்ந்தும் பல பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் இன்றும் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கதாகும்.