பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 52 ஆவது லீக் போட்டி கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு மொஹாலியில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய, பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 183 ஓட்டங்களை குவித்தது.

184 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி 18 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து பஞ்சாப் அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

கொல்கத்தா அணி சார்பில் கிறிஸ் லின் 46 ஓட்டத்துடனும், உத்தப்பா 22 ஓட்டத்துடனும், ரஸல் 24 ஓட்டத்துடனும் அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 65 ஓட்டத்துடனும், அணித் தலைவர் தினேஷ் கார்திக் 21 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் மொஹமட் ஷமி, ஆண்ரு டை மற்றும் அஷ்வின் ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

நன்றி : ஐ.பி.எல்.இணையத்தளம்