முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை அமெரிக்க அரசாங்கம் கைதுசெய்ய எமது அரசாங்கம் அனுமதி கொடுக்காது. எந்த குற்றமாக இருந்தாலும் அல்லது குற்றச்சாட்டாக இருந்தாலும் அவற்றை எமது சட்டத்தின் பிரகாரம் உள்நாட்டிலேயே விசாரிக்கப்படும். சர்வதேசம் இந்த விடயத்தில் தலையிட எம்மால் அனுமதிக்க முடியாது என அமைச்சர் கபீர் ஹாஸிம் தெரிவித்தார்.
தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை கைது செய்யுமாறு இரு தமிழ் அமைப்புகளான தமிழ் ப்போர் ஒபாமா மற்றும் அமெரிக்கன் தமிழ் போரம் ஆகிய இரு அமைப்புகள் அமெரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் அரசாங்கதின் கருத்தினை தெரிவிக்கும் போதே அமைச்சர் கபீர் ஹாஸிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலத்தில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவருவதில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கும் பங்கு உள்ளது. அவ்வாறு இருக்கையில் இறுதி யுத்தத்தில் 70ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக இந்த அமெரிக்க தமிழ் அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன. அதேபோல் யுத்த குற்றம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணை நடத்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷவை கைதுசெய்ய வேண்டும் எனவும் அவ் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்த கருத்துக்கு அவர் பதில் கூறுகையில்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை கைதுசெய்யக்கோரி அமெரிக்க தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன என்ற செய்து வெளிவந்துள்ளது. எனினும் அவ்வாறு அவர்களின் கருத்துகளுக்கு அமைய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவை அமெரிக்க அரசாங்கம் கைதுசெய்ய எமது அரசாங்கம் அனுமதி கொடுக்காது. எந்த குற்றமாக இருந்தாலும் அல்லது குற்றச்சாட்டாக இருந்தாலும் அவற்றை எமது சட்டத்தின் பிரகாரம் உள்நாட்டிலேயே விசாரிக்கப்படும். சர்வதேசம் இந்த விடயத்தில் தலையிட எம்மால் அனுமதிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM