சதம் அடித்தபோது எனக்கு வயது 16 அல்ல 20 அல்லது 21 என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு, 37 பந்துகளில் சதமடித்து அப்ரிடி ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார். அதைவிடவும் அவருக்கு அப்போது 16 வயது என தகவல்கள் பரவின. எனினும் அப்ரிடியின் வயது குறித்துப் பல விமர்சனங்கள் எழுந்தன.

இந் நிலையில் அப்போது தெரிவிக்கப்பட்ட தகவலில் உண்மையில்லை என தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலில் வெளிப்படுத்தியுள்ளார் அப்ரிடி. 

கேம்சேஞ்சர் என்கிற நூல் இந்த வாரம் இந்தியா, பாகிஸ்தானில் வெளியாகியுள்ளது. அந்த நூலில், 1975 ஆம் நான் பிறந்தேன். 1996 ஒக்டோபரில் பாகிஸ்தான் அணிக்கு நான் தெரிவாகினேன்.

நிர்வாகிகள் சொன்னது போல் எனக்கு 16 வயது அல்ல, 19 வயது. என்னுடைய வயதை நிர்வாகிகள் தவறாகக் கூறிவிட்டார்கள் என்று எழுதியுள்ளார். 

இதன்மூலம் 37 பந்துகளில் சதம் அடித்தபோது அவருக்கு வயது 16 அல்ல 20 அல்லது 21 என்கிற உண்மை தற்போது தெரியவந்துள்ளது.