குறை பிரசவ குழந்தைகளும், நாட்பட்ட சிறுநீரகக் கோளாறுகளும் 

Published By: R. Kalaichelvan

03 May, 2019 | 02:49 PM
image

குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் நாட்பட்ட சிறுநீரக கோளாறு ஏற்படும் என்று அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

குறைமாத பிரசவம்,அதாவது 37 வாரங்களுக்கு உட்பட்ட குழந்தைகள் ஏதேனும் ஒரு காரணத்தினால் பிரசவிக்க நேர்ந்தால், அந்த குழந்தைகளுக்கு நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். 

இதுகுறித்து மேலும் மருத்துவர்கள் விவரிக்கையில்,‘ குழந்தைகளின் உடலிலுள்ள நச்சுக்களும் கழிவுகளும் வெளியேற்றுவதற்கான நெப்ரான்கள் எனப்படும் சிறுநீரகத்தில் உள்ள உடற்கூறு குழந்தைகளின் வளர்ச்சியில் ஏழுஅல்லது எட்டாம் மாதத்திற்கு பிறகு தான் நடைபெறுகிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.  

அத்துடன் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் வளரும் போதே சிறுநீரக கோளாறு ஏற்படாதிருக்க =வராமல் தற்காத்துக் கொள்வதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால், நாட்பட்ட சிறுநீரக கோளாறுகளிலிருந்து விடுபட முடியும் என்றும் அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். இத்தகைய விழிப்புணர்வு தெற்காசியாவில் 10 சதவிகிதம் மட்டுமே இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். 

தெற்காசியா முழுவதும் சிறுநீரக தொற்று, சிறுநீரக கோளாறு, சிறுநீரக நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்திருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய பாதிப்புக்கு டயாலிசிஸ் என்ற சிகிச்சை முறையும், சிறுநீரக மாற்று சிகிச்சையும் தான் சிறந்த தீர்வு என்றும், இது நோயாளிகளை பொறுத்து மாறுபடக்கூடும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு விரைவில் சிகிச்சை பெறுவது நலம் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

குமட்டல், வாந்தி, பசியின்மை, சோர்வு, பலவீனம் ,தூக்கமின்மை, மன உளைச்சல், பணியில் ஒருமுகத்துடன் ஈடுபட இயலாத நிலை, தசைப்பிடிப்பு, குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அரிப்பு, நெஞ்சுவலி, மூச்சு விடுதலில் சிரமம், உயர் ரத்த அழுத்தம்.. இதுபோன்ற பாதிப்புகள் இருந்தால் ,உடனடியாக சிறுநீரக பாதிப்பு குறித்த அனைத்து பரிசோதனைகளையும் செய்து, பாதிப்பின் தன்மையை தெரிந்து கொண்டு, அதற்குரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால், சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதை வெகுவாகக் குறைக்க முடியும்.

டொக்டர் குரு பாலாஜி.

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29