யாழ். கொக்குவில் பகுதியில் இன்று காலை நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின்போது ஆவா குழுவினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தனது வீட்டில் வன்முறைகளில் ஈடுபடுவதற்காக தயார் செய்து வைத்திருந்த ஆயுதம் ஒன்று வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவகளில் தொடர்பு பட்டவர் ஆவர்.

அவர் இதற்கு முன்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டிருந்தார்.

இன்று அவருக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையிலேயே சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.