(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கைக்கு நாடு கடத்துவதைத் தடுக்குமாறு கோரி, ஐக்கிய அரபு எமீரகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான மாகந்துரே மதூஷ், தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் 09 ஆம் திகதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இன்றைய தினம் அது குறித்து தீர்ப்பறிவிக்கப்படவுள்ளதாக கடந்த தவணையின் போது கூறப்பட்டபோதும் தீர்ப்பு 9 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டதாக டுபாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மனு இன்று டுபாய் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.