12 வயது பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய மூவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.ஜெயசீலன் தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.  

மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட திருச்செந்தூர் கடற்கரை பிரதேசத்திற்கு குறித்த சிறுமியை அழைத்துச்சென்று பாலியில் வல்லுறவிற்குட்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.

சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய குற்றத்தின் பேரில் ஒருவரும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டின்பேரில் இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

பாடசாலையில் ஏழாம் ஆண்டில் கல்வி பயிலும் இச்சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

- ஜவ்பர்கான்