யாழ் மிருசுவில் பகுதியில் குளவி கொட்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ் மிருசுவில் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய நபரே உயிரிழந்தவராவர்.
அவரது மனைவி ,மனைவியின் சகோதரி ஆகிய இருவரும் குளவிகொட்டுக்கு இலக்கான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களின் வீட்டு வேலியில் இராட்சத குளவி கூடு காணப்பட்டதாகவும் அவை காற்று வீசியமையால் களைந்து வீட்டில் இருந்தவர்களை கொட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குளவி கொட்டுக்கு இலக்காகிய மூவரும் அவல குரல் எழுப்பிய போது அயலவர்கள் காவோலைகள் , தென்னோலைகளில் தீ மூட்டி சென்று குளவி கொட்டுக்கு இலக்கானவர்கள் அங்கிருந்து மீட்டு கொடிகாமம் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து மூவரும் மேலதிக சிகிச்சைக்க யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதோடு,குளவி கொட்டுக்கு இலக்கான நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM