தேவாலயங்களில் ஞாயிறு ஆராதனைகளை நடத்துவதை தவிர்க்குமாறு பேராயர் கார்தினால் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் உட்பட பல இடங்களில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளை தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்களில் இடம்பெறும் ஆராதனைகளை நாட்டின் சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு தவிர்க்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டனை கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் பாடசாலைகளையும் 2 ஆம் தவணைக்காக அடுத்த வாரமும் திறக்கவேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டுள்ளார்.