மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 10, வ000 மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்த நபரை எதிர்வரும் 26ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் கஞ்சாவை வைத்திருந்தபோது காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி கே.ஜெயசீலன் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, புத்தாண்டு காலத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட மேலும் சிலரையும் பொலிஸார் கைது செய்ததாகவும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

- ஜவ்பர்கான்