(நா.தினுஷா)

ராஜித சேனாரத்ன என் மீது முன்வைத்த போலி குற்றசாட்டினால் எனக்கு ஏற்பட்ட களங்கத்துக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அத்துடன் தடைசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் எதிர் தரப்பினரை தொடர்புப்படுத்த அரசாங்கம் தொடர் குற்றசாட்டுக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

எதிர்கட்சி தலைவரின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.