மூன்று வித்தியாசமான வேடங்களில் சூர்யா நடித்த '24' திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் வெளிவருமா? அல்லது தேர்தலுக்கு பின் வெளிவருமா? என்ற குழப்பம் இருந்தது. இந்நிலையில் இந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

விஜய்யின் 'தெறி' படத்தை அமெரிக்கா மற்றும் கனடாவில் ரிலீஸ் செய்த சினிகேலக்ஸி நிறுவனம்தான் சூர்யாவின் '24' படத்தையும் ரிலீஸ் செய்கிறது. இந்த நிறுவனம் '24' படத்தை வரும் மே மாதம் 6ஆம் திகதி ரிலீஸ் செய்யவுள்ளதாகவும், அதற்கு முந்தைய நாள் மே 5ஆம் திகதி பிரிமியர் காட்சிகள் திரையிடப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதிலிருந்து தேர்தலுக்கு முன்பே '24' ரிலீஸாவது உறுதியாகியுள்ளது.

மேலும் '24' திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. சூர்யா, சமந்தா, நித்யாமேனன் நடித்துள்ள இந்த படதை விக்ரம்குமார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.