12 ஆவது ஐ.பி.எல்.லின் 50 ஆது லீக் ஆட்டம் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் டெல்லி அணி களத்தடுப்பை தேர்வு செய்துள்ள நிலையில், சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முரளி விஜய், வோட்சன், ரய்னா, அம்பதி ராயுடு, கேதர் யாதவ், த்ரூவ் ஷோரி, பிராவோ, செண்டனர், தீபக் சாஹர், ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாகீர் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரேயஸ் அய்யர் தல‍ைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியில் பிரிதிவ் ஷா, தவான், ரிஷாத் பந்த், கெலிங் இங்ரம், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், அக்ஸர் படேல், அமித் மிஷ்ரா, சண்டீப் லட்சுமனன் மற்றும் இஷான் சர்மா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.