எமது வாழ்நாள் காலப் பகு­தியில் பூமி­யுடன் விண்கல் மோத வாய்ப்­புள்­ள­தாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலை­யத்­தின் நிர்­வா­கி­யான ஜிம் பிறை­டென்ஸ்ரைன் தெரி­வித்தார்.

அமெ­ரிக்க வாஷிங்டன் நகரில் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற இந்த ஆண்­டுக்­கான கோள் பாது­காப்பு கூட்­டத்தில் உரை­யாற்­றுகையிலேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

மேற்­படி விண்கல் தொடர்­பான அச்­சுறுத்தல் என்­பது ஒரு கற்­பனைத் திரைப்­படக்  கதை­யல்ல என வலி­யு­றுத்­திய அவர் இந்த அச்­சு­றுத்தல் தொடர்­பிலும் அதனைத் தடுப்­பது குறித்தும் உல­களாவிய ஆய்­வொன்று முன் னெடுக்கப்பட வேண்டும் என அழைப்ப விடுத்தார்.