இலங்கையில் அஞ்சலி செலுத்தும் தினமாக மாறிய உலக தொழிலாளர்கள் தினம்

By Daya

01 May, 2019 | 03:38 PM
image

வவுனியாவில் இன்று காலை 10.30மணியளவில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரால் அவர்களது அலுவலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச தொழிலாளர்கள் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையினால் உயிரிழந்த உறவுகளுக்கும் வவுனியாவில் அண்மையில் நான்கு நகரசபை தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வாக இன்றைய மே தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.


இன்றைய மே தினத்தில் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு, பசுமைத் தொழிலாளர்கள் நலன்புரிச்சங்கம், நகர சிறு வியாபாரிகள் சங்கம், உழைக்கும் பெண்கள் விடுதலை முன்னணி, ஜக்கிய தொழிலாளர்கள் தொழிற்சங்கம், மக்கள் திட்ட ஒன்றியம் வடமாகாணம், ஜனராஜா சுகாதாரப் பொதுச் சேவைகள் சங்கம், இடது குரல் அமைப்பினர் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right