2016ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் 15,000 பேர் டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் தொற்றுக்குள்ளான நோயாளர்களில் 53 சதவீதத்தினர் மேல்மாகாணத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இலங்கையில் தொடர்ந்தும் மேல்மாகாணத்திலேயே அதிகமானோர் டெங்கு தொற்றுக்குள்ளாகி வருவதோடு சமீபத்தில் தெஹிவளை, கல்கிஸ்ஸை பகுதிகளிலுள்ள 2,500 வீடுகளில் சுகாதார அதிகாரிகளினால் சோதனையிடப்பட்டு நுளம்புகள் பெருகும் வகையில் காணப்பட்ட பொருட்கள் உடனடியாக அகற்றப்பட்டன. அத்துடன் சுற்றுச்சூழலை சுகாதாரமற்ற வகையில் வைத்திருந்த 40பேருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் சூழல் பாதுகாப்பு பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் டெங்கு பரவும் வகையிலான சுற்றுச்சூழலை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.