வியட்நாம்  நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் வாத்து முட்டைகளை வாங்கி சென்றுள்ளார் அந்த முட்டைகள் அனைத்திலும் வாத்துக் குஞ்சுகள் இருந்தமை அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் சமையலுக்காக வாத்து முட்டைகளை வாங்கி அடுக்கி வைத்துள்ளார்.

குறித்த பெண் சமையல் செய்ய பயன்படுத்த முயன்ற போது உள்ளே வாத்துக் குஞ்சுகள் வெளிவந்துள்ளது. இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால் அவர் வாங்கி வந்த 24 முட்டைகளிலிருந்தும் 24 குஞ்சுகள் வெளிவந்துள்ளது.

 இப்படி எதிர்பாரா விதமாக பிறந்த வாத்துக் குஞ்சுகளை நான் எப்படி பராமரிப்பேன் என்ற வருத்தத்தில் ஆழ்ந்துள்ளார் அந்த பெண்.

அவர் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த விடயத்தை தெரிவித்து அந்த அழகான வாத்துக் குஞ்சுகளை தத்தெடுக்க கோரியுள்ளார். அப்படியே அந்த அழகான குஞ்சுகளின் படங்களை  போடவும் அவர் மறக்கவில்லை.