இயக்குநர் ஆர் கண்ணன் இயக்கத்தில்  பெயரிடப்படாத எக்சன்வித் கொமடி படத்தில் சந்தானம் நடிக்கிறார்.

ஜெயங்கொண்டான், கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, இவன் தந்திரன், பூமராங் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆர் கண்ணன் இயக்கத்தில் தயாராக இருக்கும் புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்க சந்தானம் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதுகுறித்து இயக்குனர் கண்ணன் பேசுகையில்,“ பூமராங் படத்திற்கு பிறகு எக்சன் கொமடி ஜேனரில் திரைக்கதை ஒன்றை எழுதினேன். அதில் சந்தானம் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதி, அவரிடம் சொன்னவுடன் கதை பிடித்துப்போய் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். படத்தின் பணிகள் அடுத்த மாதம் தொடங்குகிறது.” என்றார்.

சந்தானம் தற்போது தில்லுக்கு துட்டு=2 படத்தை இயக்கிய இயக்குனரின் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.