வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகளுக்கு பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களை கருத்திற்கொண்டு இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து உள்ளூர் தீவிராவத அமைப்புகள் மேற்கொண்ட தாக்குதல்களில் பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

இதனை கருத்திற்கொண்டு நாட்டின் பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்காக குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினால் ஆலேசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.