இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தற்கொலை படையால் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவுகளை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களும், மதகுருக்களும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். 

மேலும், அங்கு சென்ற பேராயர், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்களையும் இறையாசீர்வாதங்களையும் வழங்கியுள்ளார்.

மேலும் நாமும் தற்கொலை படை தாக்குதலில் படுகாயமடைந்த உறவுகள் மிகவிரைவில் சுகம் அடைந்து மீண்டும் வீடு திரும்ப வேண்டும் என தனிப்பட்ட ரீதியில் பிரார்த்திப்போம் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.