ஜோதிகாவும், ரேவதியும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஜாக்பாட் ’என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

‘குலேபகாவலி’ என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஜாக்பாட்’. நகைச்சுவை மற்றும் திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த படத்தில் ஜோதிகா, ரேவதி, ஆனந்தராஜ், யோகி பாபு, மனோபாலா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

இப்படத்திற்கு ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். விஜய் படத்தை தொகுக்க, கலை இயக்கத்தை வீரசமர் கவனிக்கிறார். இப்படத்தை 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக சூர்யா தயாரித்திருக்கிறார்.

அண்மையில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படபிடிப்பு முப்பத்தைந்து நாட்களில் நிறைவுப் பெற்றது. தற்போது அதன் டைட்டிலையும், ஃபர்ஸ்ட் லுக்கையும் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.

பர்ஸ்ட் லுக்கில் ஜோதிகாவும், ரேவதியும் பொலிஸ் உடையில் தோன்றுகிறார்கள். ஆனால் இருவரும் போலியான பொலிஸ் என்பது பார்த்தவுடன் தெரிகிறது. இருந்தாலும் மற்றொரு போஸ்டரில் ‘டைம் பாஸ்’ என்ற வாசகம் இடம்பெற்றிருப்பதால் முற்றிலும் பொழுதுபோக்கு நகைச்சுவை படமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.