சுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர்  மார்கொட் வாஸ்ட்ரோம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை வரவுள்ளார். 

நாளை முதல் மூன்று தினங்கள் அவர் இலங்கையில் தங்கி இருந்து பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன்,   நாடாளுமன்ற சபாநாயகரையும் சந்திப்பதோடு, எதிர்வரும் 26 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது வடமாகாண ஆளுனர் மற்றும் வடக்கு முதலமைச்சர் உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதுடன், வடமாகாணத்தில் இயங்கும் சிவில் சமுக அமைப்புகளையும் சந்தித்து உரையாற்றவுள்ளதோடு,மேலும் யாழ்ப்பாணத்தில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்து அவர்களின் குறைநிறைகளை கேட்டறியவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாகஸ்ட் வொல்ஸ்டோம் லக்‌ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில், "வெளிநாட்டு கொள்கைகளில் பெண்களின் பொறுப்பு" என்ற தலைப்பிலான உரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளமையும் குறிப்பிடத்தக்கவை.