இத்தாலியில் போலி கடவுச்சீட்டு வைத்திருந்த நபர் ஒருவர்  அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த நபர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய  என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ,மேலதிக விசாரணைகளுக்காக அவர் கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படக்கப்பட்டுள்ளனர்.