பெண்களுக்கான உலக டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் கிவிடோவா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. அதல் பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தில் தொடருகிறார். 

செக் குடியரசின் கிவிடோவா ஒரு இடம் முன்னேறி 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார். 

தொடர்ந்து ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் 3 ஆவது இடத்திலும், ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 4 ஆவது இடத்திலும், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாக செக்குடியரசின் கிவிடோவாவை வீழ்த்தி சம்பியன் பட்டமை வென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.