தொழிலாளர்கள் தினத்தை அமைதியான முறையில் நடத்துவதற்கும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவும் வவுனியா வர்த்தகர் சங்கம் அழைப்பு வித்துள்ளது. 

வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாளை மே தினமான உலக தொழிலாளர்கள் தினத்தில் விடுமுறை வழங்கி தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கம் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு அழைப்பு விடுத்துள்ளது.

வவுனியாவில் கடந்த காலங்களில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்களை இவ்வருடமும் உலக தொழிலாளர்கள் தினத்தில் தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி பன்னாட்டு தொழிலாளர்கள் தினத்தை தொழிலாளர்கள் அனுபவிப்பதற்கும் உலக தொழிலாளர்கள் தினத்தை இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களினால் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலை காரணமாக அமைதியான முறையில் எளிமையாக முன்னெடுக்குமாறும் வியாபார நிலைய உரிமையாளர்கள் நாளைய தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குமாறு வவுனியா வர்த்தகர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.