பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடும்  இளைஞருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மன்னார் உதயபுரம் பகுதியில் பொதுமக்கள் இன்று அதிகாலை 5 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து அவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள உதயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவரை, பேசாலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்ததை தொடர்ந்து  இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு தொடர்பு கொண்டு கேட்ட போது, குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகத்துக்குரிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.