மேல் மாகாணத்திலும், புத்தளம் மாவட்டத்திலும் இயங்கும் இராணுவ, கடற்படை, விமானப்படை, பொலிஸ் பிரிவுகள் யாவும் கொழும்பு கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. செயற்பாட்டு நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு சகல பிரிவுகளையும் கூட்டு நடவடிக்கை கட்டளை தலைமையகத்தின் கீழ் கொண்டுவந்ததாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.

மேல் மாகாண பாதுகாப்புப் படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றும் மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே புதிய கட்டளை தலைமையகத்தின் தலைவராக கடமையாற்றுவார். 

மேலும், கடற்படையைச் சேர்ந்த றியர் அட்மிரல் டபிள்யு.எஸ்.எஸ்.பெரேரா, விமானப் படையைச் சேர்ந்த எயார்வைஸ் மார்ஷல் டபிள்யு.எல்.ஆர்.பி.றொட்றிக்கோ, பொலிஸ் அத்தியட்சகர் அனில் பிரியந்த ஆகியோர் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக செயற்படுவார்கள்.

கொழும்பு கூட்டு நடவடிக்கை தலைமையகமானது பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியின் கீழ் இயங்கும் என இராணுவத் தளபதி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.