பொலிஸாரால் தேடப்பட்டு வந்த லொறி சிக்கியது

Published By: R. Kalaichelvan

30 Apr, 2019 | 11:53 AM
image

தொடர் வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய, தேடப்பட்டுவந்த லொறி ஒன்று பொலன்னறுவை சுங்காவில பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த லொறியுடன் 3 சந்தேகநபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

EP - PX 2399 என்ற இலக்கத் தகடு கொண்ட லொறி ஒன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு , நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்களை அடுத்து சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டதுடன், அது தொடர்பிலான தகவல்களை அறியத்தருமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில்,நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த சோதனை நடவடிக்கைகளக்கு அமைய தேடப்பட்டு வந்த ஐந்து வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒரு லொறி இன்று பொலனறுவை பகுதியில் வைத்து பொலிஸாரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்,சந்தேகத்திற்கு இடமான மூன்று மோட்டார் சைக்கிள்கள் இதுவரையில் கைப்பற்றப்படவில்லையென்பதும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களனி பல்கலைக்கழக பேராசிரியர் விபத்தில் சிக்கி...

2025-03-26 10:38:06
news-image

கொழும்பில் காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு...

2025-03-26 10:43:58
news-image

விகாராதிபதி வெட்டிக்கொலை : சந்தேகநபர் தப்பியோட்டம்...

2025-03-26 10:21:12
news-image

சிவனொளிபாத மலை யாத்திரைக்குச் சென்று போதைப்பொருள்...

2025-03-26 10:01:49
news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49