உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று நாட்டில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுப் பிரச்சினைகள் இருக்குமாயின் விரைவாக அவற்றை அடையாளம் கண்டு அவர்களது வீட்டுத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என சபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய தெரிவித்துள்ளார். இதற்கமைவாக இவ்வாறான குடும்பங்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தற்பொழுது இடம்பெறுகின்றமையும் குறிப்பிடதக்ககது.