சமூகவலைத்தளங்கள் மீதான தடையினை நீக்கக் கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைத் தொடர்பு ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலைத் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து சமூக வலைத்தளங்களினூடாக பரவிய பொய்யான வதந்திகள் மற்றும் சமூக வலைத்தளங்களை மையப்படுத்தி தீவிரவாதத்தை திணிக்கும் நடவடிக்கைகள் போன்ற காரணத்திற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமூகவலைத்தள நடவடிக்கைகளை தற்காலிமாக நிறுத்தி வைத்தார்.

இந் நிலையிலேயே 8 நாட்களுக்குப் பிறகு ஜனாதிபதி இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார்.