கேரளாவில் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ். உறுப்பினர் ; திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின!

Published By: Vishnu

30 Apr, 2019 | 11:13 AM
image

ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற இயக்கத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கேரளாவில் கைதுசெய்யப்பட்ட இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, அவர்  ஐ.எஸ்.அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவந்துள்ளது.

பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 29 வயதையுடைய ரியாஸ் அபூபக்கர் என்ற இளைஞரை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினாரால் இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் ஆவார்.

அவரிடம் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையின்போது, அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு வைத்ததும், கேரளாவில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. 

அத்துடன் ஜஹ்ரான் ஹாஷிமின் பேச்சுகளை ஒரு வருடத்திற்கும் மேலாக ரியாஸ் அபூபக்கர் தொடர்ச்சியாக கேட்டு பின்பற்றி வந்தது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள ரியாஸ் அபூபக்கர் இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுமுள்ளார்.

முன்னதாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேதிக்கப்பட்ட 6 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களும் ஜஹ்ரான் ஹாஷிம் பேச்சுகளை விரும்பி கேட்டது தெரியவந்தது. 

அவர்கள் தமிழகத்தில் உள்ள இந்து தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரியவந்ததாக கூறப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாய்வானில் வணிக வளாகத்தில் வெடிப்பு சம்பவம்...

2025-02-13 15:32:35
news-image

ஆப்கான் தலைநகரில் ஒரே வாரத்தில் இரண்டாவது...

2025-02-13 14:24:17
news-image

உக்ரைன் குறித்த அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம்?

2025-02-13 12:40:09
news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51
news-image

86 வயது இஸ்ரேலிய பணயக்கைதி மரணம்

2025-02-11 15:20:54
news-image

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய...

2025-02-11 13:40:13
news-image

நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து...

2025-02-11 12:18:47
news-image

சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை...

2025-02-11 11:58:38
news-image

இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி:...

2025-02-11 07:37:24
news-image

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிரஆர்வமாக...

2025-02-10 15:56:40
news-image

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த...

2025-02-10 13:15:46
news-image

'ஹரி அவரது மனைவியால் ஏற்கனவே பல...

2025-02-10 11:32:27