பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைஸர்ஸ் அணி 45 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 48 ஆவது லீக் ஆட்டம் சன் ரைஸர்ஸ் ஐதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையில் இன்றிரவு 8.00 மணிக்கு கொல்கத்தா ராஜிவ் காந்தி மைதானத்தில் ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்யஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 212 ஓட்டங்களை குவித்தது.

ஐதராபாத் அணி சார்பில் டேவிட் வோர்னர் 56 பந்துகளில் 2 ஆறு ஓட்டம் 7 நான்கு ஓட்டம் அடங்களாக 81 ஓட்டத்துடனும், விர்டிமன் சஹா 28 ஓட்டத்துடனும், மனீஷ் பாண்டே 36 ஓட்டத்துடனும், மொஹமட் நபி 20 ஓட்டத்துடனும், வில்லியம்சன் 14 ஓட்டத்துடனும், ரஷித் கான் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க  விஜய் சங்கர் 7 ஓட்டத்துடனும் அபிஷேக் சர்மா 5 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் மொஹமட் ஷமி மற்றும் அஷ்வின் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷீத் சிங், முருகன் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

213 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து, 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 45 ஓட்டத்தினால் வெற்றிபெற்றது.

பஞ்சாப் அணி சார்பில் ராகுல் 59 பந்துகளில் 5 ஆறு ஓட்டம், 4 நான்கு ஓட்டம் அடங்களாக 79 ஓட்டத்துடனும், கிறிஸ் கெய்ல் 4 ஓட்டத்துடனும், அகர்வால் 27 ஓட்டத்துடனும், நிக்கோலஷ் பூரண் 21, டேவிட் மில்லர் 11 ஓட்டத்துடனும், சிம்ரன் சிங் 16 ஓட்டத்துடனும், அஷ்வின் மற்றும் முஜிபுர் ரஹ்மான் டக்கவுட் முறையிலும் ஆட்டமிழக்க மெஹமட் ஷமி, முருகன் அஷ்வின் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் ஐதராபாத்  அணி சார்பில் கலில் அஹமட் மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளையும், சண்டீப் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்த வெற்றி மூலம் பிளே ஒப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை ஐதராபாத் அணி தக்க வைத்துள்ளது.

அத்துடன் டேவிட் வோர்னர் இந்தப் போட்டியுடன் நாடு திரும்பவுள்மையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஐ.பி.எல். இணையத்தளம்