கால்பந்து சம்மேளனம் நடத்தும் எவ்.ஏ.கிண்ணத்தின் 32 அணிகள் மோதும் சுற்று ஆரம்பம் 

Published By: Priyatharshan

23 Apr, 2016 | 11:49 AM
image

இலங்கைக் கால்­பந்து சம்­மே­ளனம் நடத்தும் கார்கில்ஸ் புட்­சிட்டி எவ்.ஏ. கிண்ணத் தொடரின் 7ஆவது சுற்றுப் போட்­டிகள் அதா­வது 32 அணிகள் சுற்று இன்று ஆரம்­ப­மா­கின்­றது. இந்தப் போட்டிகள் தொடர்ந்து, 24, 30, மே 1ஆம் திக­தி­களில் நடை­பெ­ற­வுள்­ளன.

2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்­ப­மான 2015 மற்றும் 2016ஆம் ஆண்­டுக்­கான எவ்.ஏ. கிண்ணக் கால்­பந்­தாட்ட தொடர் தற்­போது பல சுற்­றுக்­களைத் தாண்டி 32 அணிகள் மோதும் சுற்­று­வரை நகர்ந்­தி­ருக்­கி­றது. இந்தத் தொடரில் மொத்தம் 508 கழக அணிகள் பங்­கு­பற்­றி­யி­ருந்­தன. இதில் தற்­போது 32 அணிகள் 7ஆவது சுற்­றுக்கு தெரி­வா­கி­யுள்­ளன.

இதில் யார் யார் மோது­வது என்­பதை தீர்­மா­னிக்கும் போட்­டி­க­ளுக்­கான குலுக்கல் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னத்தின் அனு­ச­ர­ணை­யா­ளர்கள், கழ­கங்­களின் பிர­தி­நி­திகள் முன்­னி­லையில் கடந்த புதன்­கி­ழமை நடை­பெற்­றது.

508 அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்­று­வந்த இந்தத் தொடரின் 478ஆவது போட்­டி­யி­லி­ருந்து 7ஆவது சுற்று ஆரம்­பிக்­கி­றது. இதில் குலுக்கல் முறையில் மோதும் அணிகள் தெரி­வு­செய்­யப்­பட்­டன. அதன்­படி கொலம்போ எவ்.சி. எதிர் ரெட் ஸ்டார், நியூ ஸ்டார் எதிர் ஜெட் லைனர்ஸ், சென். ஜோசப் எஸ்.சி.மன்னார் எதிர் சுப்பர் சன், அப்­கன்ட்ரி லயன்ஸ் எதிர் ஹைர்லி எஸ்.சி, சொலிட் எதிர் கிரு­லப்­பனை யுனைட்டட், இலங்கை விமா­னப்­படை அணி எதிர் நிகம்போ யூத், ஹைலண்டர்ஸ் எதிர் பிரில்லியன்ட் எஸ்.சி, இலங்கை இரா­ணுவ அணி எதிர் நந்­தி­மித்ர எஸ்.சி. அணிகள் மோது­கின்­றன.

486 ஆவது போட்­டி­யி­லி­ருந்து மோதும் அணி­க­ளாக கடற்­படை அணி எதிர் நியூ யங்கர்ஸ், ரெனெளன் எஸ்.சி எதிர் களுத்­தரை பார்க், ஜாவா லேன் எதிர் கிறிஸ்டல் பெலஸ், சௌன்டர்ஸ் எதிர் கொமர்டெஸ் பதுளை, சிங்கிங் விஷ் யாழ்ப்­பாணம் எதிர் பெலிகன்ஸ் குரு­ணா­கலைஇ இலங்கை பொலிஸ் எதிர் லிவர் பூல், புளூ ஸ்டார் எதிர் சென் நிக்கலஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சதம் குவித்து இங்கிலாந்தை மீட்டெடுத்தார் ஜோ...

2024-02-23 22:25:16
news-image

மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று...

2024-02-23 21:56:41
news-image

பென்ஸ் - வெஸ்லி சமஅளவில் மோதல்...

2024-02-23 21:20:49
news-image

ஸாஹிரா றக்பி நூற்றாண்டு அணிக்கு எழுவர்...

2024-02-23 17:57:46
news-image

றோயல் - தோமாவின் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 22:05:50
news-image

றோயல் - தோமியன் கிரிக்கெட் சமருக்கு...

2024-02-23 00:42:42
news-image

நடுவருடன் மோதல் - வனிந்து போட்டி...

2024-02-22 15:09:19
news-image

விக்ரம் - ராஜன் - கங்கு...

2024-02-22 14:49:14
news-image

மூன்றாவது ரி20 போட்டியில் நோபோல் சர்ச்சை...

2024-02-22 13:51:18
news-image

இலங்கையை 3 ஓட்டங்களால் வீழ்த்தி ஆறுதல்...

2024-02-22 00:28:59
news-image

இந்தியா இங்கிலாந்து அணிகளிற்கு இடையிலான நான்காவது...

2024-02-21 16:12:47
news-image

ஸாஹிரா கால்பந்தாட்டத்திற்கு பிக்ஸ்டன் அனுசரணை

2024-02-21 14:45:53